Wednesday, September 22, 2010

She’s Out Of My League - பொருந்தாக் காதல்…




எப்போதாவது ஒரு படத்தை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து,அது எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்திருக்கிறதா?அப்பேர்ப்பட்ட படம் தான் இந்த She’s Out of My League....

கதை என்னன்னா,well, the title says it all !

அதாவது,ஒரு சுமாரான இளைஞன்,ஒரு மிக அழகான பெண்...

இந்த இருவருக்கும் இடையில தற்செயலா ஏற்படும் காதல்,மோதல்,பிரிவு,ஒன்று சேருதல்... அவ்ளோ தான்.அட,அமெரிக்க காதல் படங்கள்ல வேற என்ன பெருசா எதிர்பார்க்க முடியும்? ;)

கிர்க் (Kirk Kettner) Pittsburg இல் வாழும், அங்கே உள்ள ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி ஆபீசராக பணிபுரியும்,inferiority complex கொண்ட, மகா ஈகோ பிடித்த self centred ஆன தன்னுடைய முன்னாள் காதலியை திரும்ப பெற துடிக்கும் (அவ்ளோ பிடிக்கும்னு இல்ல,அவனுக்கு வேற எதுவும் மடியாததால..),ஒரு மிகச் சுமாரான இளைஞன்.அவனது நண்பர்களின் கணக்குப்படி அவனுக்கு ஒரு 5 மார்க் தரலாம்.

ஒருநாள் தற்செயலா மோலி(Molly McCleish) அப்டிங்கற ஒரு பொண்ணை ஏர்போர்ட்ல   சந்திக்கிறான்.அவளோட ஐ போன ஏர்போர்ட் செக்யூரிட்டி ஏரியால மறந்து வச்சுட்டுப் shes_out_of_my_league_001போய்ட,அந்த ஐ போனை எடுத்துக் கொண்டு போய் அவகிட்ட கொடுக்குறான்.அங்க மெல்ல நட்பு தொடங்குது ரெண்டு பேருக்கும்.போகப் போக,அவனோட கேரக்டர் பிடிச்சுப் போயிடுற மோலி அவனை காதலிக்க ஆரம்பிக்கிறா.ஆனா கிர்க்கோட நண்பர்கள் அதிர்சியாகுறாங்க.அஞ்சு மார்க் ஆளான இவனை பத்து மார்க் பிகரு எப்படி லவ் பண்ணுதுனு மண்டைய உடைச்சுக்குறாங்க.இப்படியே போய்க்கிட்டு இருக்கறப்ப தான் தெரியவருது,மோலியின் பழைய காதலன் அழகானவனா இருந்தாலும்,ஈகோ பிடிச்ச கேரக்டர் உடையவனா இருந்து அவனால அவ ரொம்ப கஷ்டப்பட்டது.ஒரு வேளை,அதனால தான், for a safer side, ஒரு சாதாரண ஆளை லவ் பண்றான்னு இவங்க நினைச்சுகுறாங்க.இந்தப் பிரச்சனையும், கிர்க்க்கு இருக்குற inferiority complex உம் சேர்ந்து ஒரு சண்டைக்கு வழிவகுக்க,ரெண்டு பேரும் பிரியுறாங்க.தன்னோட பழைய காதலியோடயே சேர நினைக்குறான் கிர்க்.ஆனா ஈகோ பிடிச்ச அவளோட இவன் சேர்றத இவன் பிரண்ட்ஸ் விரும்பலை.என்ன நடந்தது?காதலர்கள் எப்படி சேர்ந்தாங்கனு மிச்சக் கதை சொல்லுது.Shes Out Of My League movie image (3)shes-out-of-my-league-20091222011443637_640w

படத்தோட பலமே கேரக்டர்கள் தான். 

எப்பயுமே அவனை கிண்டல் செய்துகிட்டு,ஆனா அவனோட லவ்வுக்கு எல்லா உதவியும் பண்ணுற கிர்க்கின் நண்பர்கள்,

முதல்ல கிர்க்கை வேணாம்னு சொல்லிட்டு,பின்ன தன்னை விட ஒரு நல்ல பொண்னு அவனை விரும்புறது தெரிஞ்சதும் அவனை அடைய நினைக்குற அவனோட self centred காதலி,

எப்பப் பார்த்தாலும் சண்டைக்கோழியா திரியும் மோலியின் காதலி Paddy,

எப்பயும் paddy கூட சண்டை போட்டுக்கிட்டு,தன்னுடைய மார்க் சிஸ்டம்ல மகா நம்பிக்கை வச்சுக்கிட்டு, ’உன் காதல் வேலைக்கு ஆவாது’ னு சொல்லிக்கிட்டு,அதே நேரம் உதவியும் செய்யுற stainer,

ஒரே ஒரு தடவ பார்த்த ஒருத்தி ‘நல்லா இருக்கே’ சொன்னத பிடிச்சுகிட்டு,அவளைப் பத்தியே விசாரிச்சுகிட்டு, சின்னப்பிள்ளை மாதிரி சுத்துற இன்னொரு நண்பன்னு படம் முழுக்க எல்லா கேரக்டரயும் ரொம்ப கலர்புல்லா உருவாக்கி இருக்காங்க.காமெடி கலந்த கதை படத்தை இன்னும் ரசிக்கச்செய்யுது.

இந்தப் படம் ஒண்ணும் பெரிய காதல் காவியம் கிடையாது.ஆனா,கண்டிப்பா நல்ல படம்.டிவிடி கிடைச்சா கண்டிப்பா பார்க்கலாம்.

She’s out of my league – Will not be out of your league....

Rating: 7/10.


ஒரு சின்னப் பின்குறிப்பு: அந்த ஹீரோயின்க்கு பத்து மார்க் எல்லாம் ரொம்ப ஓவர்.என்னைக்கேட்டா ஒரு 7 மார்க் கொடுப்பேன். ;)

Monday, September 13, 2010

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

 

2007 இல் வெளிவந்த கொரியன் படமான இந்த My Love, நான்கு காதல்களையும் ,ஒரு destiny day யையும் பற்றியது.

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.41_[2010.08.22_18.34.25] கைகூடாத காதலினால் தவிக்கும் சே ஜின் (Se Jin),தனது வீட்டு ஜன்னலில் தனது காதலி ஜூ வோன் (Joo Won) பதித்து விட்டுச் சென்ற ஓவிய முத்திரையைக் கண்டவாறே,தனது மனதில் அவள் பதித்துவிட்டுச் சென்ற ஞாபக முத்திரைகளைக் கிளருகிறான்.அழித்துவிடக் கூடாது என்று உறுதிவாங்கப்பட்ட ஓவியத்தின் முன் நின்று,தன்னால் அழித்துவிடவே முடியாத அவளுடைய நினைவுகளை அசை போடுகிறான்.

“காதலும் காற்று போன்றதே.எந்நேரம் எப்படி வீசும் என்று இரண்டிற்கும் தெரியாது “ என்ற கவித்துவமான வசனத்தோடு ஆரம்பிக்கிறது இந்தப் படம்.

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.03.03_[2010.08.22_18.13.12] இப்போது ஒரு ரயிலில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஜின்,சில வருடங்களுக்கு முன்,அதே ரயிலில் தனது காதலியை சந்தித்து இருக்கிறான்.அவர்கள் சந்தித்த ரயில்நிலயங்களை எல்லாம் கடந்து செல்லும் அவனால்,அவர்களது சந்திப்புகளைக் கடந்து செல்ல இயலவில்லை.

அயல்நாடு சென்றாலும்,தனது இதயத்தின் ஒரு பாதியை சியோல் நகரில் தொலைத்துச் சென்றவன் ஜின் மன் (Jin-man).அயல்நாடு செல்லும் போது,தனது காதலி கதறிக்கொண்டே “நீ செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால்,எனது நெஞ்சத்தின் இப்போதைய நிலை போல அல்லாது,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்து.” என்று சொன்னதற்காகவே “Free hugs” தந்து பிறரின் நெஞ்சங்களில் அன்பை விதைப்பவன் அவன்.

அவனுடைய காதலி,அவர்கள் பிரியும் போது,ஆறு வருடங்களில் நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணத்தின் போது,மறுபடி தாங்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்ற கூறிவிட்டுப் பிரிகிறாள்.அதனை எதிர்பார்த்து மறுபடியும் கொரியாவின் சியோல் நகரம் வரும் அவன் புதியதொரு பிரச்சனையை சந்திக்கிறான்.

தனது முந்தைய செல்பேசி எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டு,அது இப்போது வேறு ஒருவரின் பயன்பாட்டில் உள்ளது என அறியும் அவன்,தனது காதலிக்குத் தெரிந்த ஒரே எண்ணான அதை திரும்பப் பெற விழைகிறான்.

ஆனால் செல்பேசி நிறுவனத்தினர் கைவிரிக்கவே,அந்த எண்ணை தற்போது உபயோகித்துக் கொண்டு இருக்கும் சூ ஜியோங்(Soo Jyeong) ஐ சந்திக்கச் செல்கிறான்.

முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து,அதனை தான் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் நடந்த நினைக்கும் அவளும்,காதலின் பிடியில் ஆழ்ந்து உழல்பவளே!

தன்னுடன் வேலை பார்க்கும் கிம் என்பவனைக் காதலிக்கிறாள் ஜியோங்.ஏற்கனவே My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.47.38_[2010.08.22_18.11.00]காதல் மணம் புரிந்து,மனைவியை இழந்து தவிக்கும் கிம் ,அவளை ஏற்கத் தயாராயில்லை.இறந்து போன தனது மனைவியின் நினைவில் ஆழ்ந்து,ஜுங்கின் காதலையும் இறக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடுகிறான் கிம்.ஜுங்கை ஏற்கத் துணியாத அவன்,அவளை தன்னிடம் இருந்து தூரப்படுத்தவே விழைகிறான்.

தூரத்தில் இருந்து அவதிப்படும் ஜுங்,தூரத்தில் இருந்து வந்திருக்கும் ஜின்னுக்கு உதவ விளைகிறாள்.

காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் சோ ஹியோன் (So Hyeon) ,உடன் பயிலும் ஜி வூ (Ji Woo) வை விரும்புகிறாள்.கொரியக் கலாச்சாரத்தில் கலந்து இருக்கும்,விழாக்களில் டிரிங்க்ஸ் சாப்பிடும் பழக்கம்,மது அருந்தத் தெரியாத ஹியோனிற்கு ஒரு தொல்லையாகவே இருந்து இருக்கிறது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு,இதனைக் கற்றுக்கொள்ளவும் ,வூவுடன் நெருக்கமாகவும் அவனை நெருங்கி My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.12.25_[2010.08.22_18.13.46]அவனது உதவியைக் கோருகிறாள் ஹியோன்.

நாளடைவில் அவனுடன் நெருக்கமாகும் அவள்,அவனுக்கு நல்லதொரு தோழியும் ஆகிறாள்.வூ தனது முன்னாள் காதலியின் நினைவில் தவிப்பதைக் காணும் அவள்,அருகில் இருந்தும் எட்ட இயலாத வானவில்லைப் போன்ற தன் காதலை எண்ணி மருகுகிறாள்.

இந்த நால்வரின் கதைகளையும்,அந்த முழு சூரிய கிரகண நாளை நோக்கிப் பயணிக்கும் இவர்களது காதல்களையும் பற்றிய அழகிய தொகுப்பே இந்தக் கதை.

எப்போதும் கனவு உலகில் வாழ்ந்த தனது முன்னாள் காதலியை உணரும் பொருட்டே தாங்கள் பயணம் செய்த ரயிலில் ஓட்டுனராக பணிபுரியும் சே ஜின்,அருகே இருந்தாலும் எட்டாத தூரத்தில் இருக்கும் காதலைக் கண்டு மருகும் ஜியோங் மற்றும் ஹியோன் ,தொலை தூரத்தில் இருந்து வந்து தொலைந்த காதலை தேட விளையும் ஜின் என இவர்களை எல்லாம் துன்புறுத்தும் காதல்,இவர்களை அந்த குறிப்பிட்ட நாளை நோக்கி தேடல்,சந்தோசம்,வருத்தம்,சுகநினைவு,எதிர்பார்ப்பு என்ற கலவையான உணர்ச்சிகளின் துணையோடு நடை போட வைக்கிறது.

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_00.51.56_[2010.08.22_18.11.46] கிம் தன்னை மறுத்து வெளியே அனுப்பிய பின்,அவனது வீட்டில் இருந்து அழுதுகொண்டே வரும் ஜியோங், “வானம் இன்று அருமையாக இருக்கிறது” என்று கூறிக்கொண்டு,தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயல்வதும்,இயலாமல் போனதும் “I need a drink” என்று சொல்லி அடுத்த காரணத்தை தேடுவதும் நெஞ்சைப் பிழியும் காட்சி.

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.56_[2010.08.22_18.14.26]

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.21.59_[2010.08.22_18.14.29]

 

 

 

 

பூட்டிய ரயிலினுள் தூங்கிக் கொண்டிருக்கும் ஜூ வை நோக்கி நகரும் கரும்புகையோடு சேர்ந்தே நகரும் மரணமும்,My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.44.36_[2010.08.22_18.15.20]

எப்போதும் கற்பனையில் மூழ்கி இருக்கும் காதலியைக் குறைசொல்லும் சே ஜின்,பின்னர் கற்பனையிலேயே அவளோடு வாழ்வதும்,

 

My.Love.2007.DVDRip.XviD.AC3.iNT-Ray.avi_snapshot_01.41.01_[2010.08.22_18.15.01] தன் காதலைத் தேடி ரணப்பட்ட மனதோடு சுற்றும் ஜின்,பிறர் நெஞ்சங்களை இதப்படுத்த முயல்வதும்,கடைசிக் காட்சியில் ,அந்தத் திருவிழாவில் காதலின் வலியோடு பிறருக்கு அன்பின் இதத்தை அளிப்பதும் நெஞ்சை நெகிழ்த்தும்.

காதல் என்பது என்ன?எதனால் இது வருகிறது?கோடானு கோடி மக்கள் இருக்கும் இந்த பூமியிலே குறிப்பாக ஒருவருக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் அளவுக்கு மாயம் செய்யும் அதன் மந்திரம் தான் என்ன?காதலர்களின் நெஞ்சில் மென்சோகத்தையும்,மெல்லிய சந்தோஷ ரேகயயையும் படரச் செய்யும் காதலின் கரங்கள் எப்பேர்ப்பட்டவை ?

ஜியோங்கிடம் பேசும் போது ஜின் சொல்லுவான், “வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவை நிலை மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் துருவ நட்சத்திரம்(North star) அவ்வாறானது அல்ல.அது எப்போதும் ஒரே இடத்தில் தான் இருக்கும்.

நாம் கொடுத்து வைத்தவர்கள்.நம் உயிருக்குயிரான நபர்கள் நமது நெஞ்சில் அந்த துருவனைப் போல நிலை கொண்டு இருக்கிறார்கள்” என்று.

அவன் சொல்ல வந்தது, ‘எப்போதும் மாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில்,மாறாத அன்பை அனுபவிக்கப் பெற்றவர்கள் காதலர்கள்’ என்பதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.காதலின் கரங்கள் அத்தகையதே...

My Love – காதலர்களுக்கு மட்டுமல்லாது,அன்பைத் துதிப்பவர்களுக்கும்...

Sunday, September 5, 2010

மல்லோரியும் , மதராசப்பட்டினமும் ....


Guys,I have an announcement to make. Most of you might not know that I started writing this blog in English at first. Then, upon several advices and warnings ( :) ) , I started to write in Tamil. But, after that,from time to time there comes occasionally the urge to write again in English. So,now I have decided to write in both.

The posts on movies will be done in Tamil,as usual.But, the posts on comics and novels (Mind you,they are about English books,so why should not I write about them in English?) will be done in English henceforth. So, English posts will be quite less.

So instead of whining over it,just try and get on with it. Let this be a learning ground and a fun ride for us both...

 As this is the first time, I have written in English as well as in Tamil.



Mallory.....  




They came to London in search of a man. A man who is very smart, dangerous, cold, evasive and who is also a traitor.....

They were originally a French revolutionary group, consisting of nine. With a devoted and smart leader called Pierre at the lead, they wrecked havoc and gave serious trouble to the Germans, until the Gestapo caught three of the group.

The torture by Gestapo cost one of the three, Rayleigh, an arm and an eye......

It gave Jeanie, the lover of Pierre, a hell specially reserved for women.

But they did not reveal anything. They were inclined not to, when the third guy, Mallory stepped in and blurted out everything, voluntarily, resulting in the death of three of his own team, including their leader.

Now, what is rest of the group is out for vengeance. After readying the money necessary, the group comes to London in search of Mallory. But they are in for a nasty surprise. They thought that five of them can handle Mallory quite easily, until two dies on the chase.

They decide to get outside help, from an ex commando, Martin Corridon. But, Martin has plans of his own for he is a cheater. He plans to double cross them once he gets the advance money, which is half the amount he has agreed for. But, now Martin is bound for a nasty surprise too. It did not work out that way. He finds himself lured into a situation where there is no other alternative than to trail and find Mallory, with the help of the team containing......

Jan – A ruthless and cruel man who would stop at nothing because of the loss of his wife on the Gestapo attack and holds it on Mallory, whom he wants to murder.

Jeanie – Driven half crazy, trauma after trauma, she wants Mallory dead for his betrayal.  

Rayleigh – A noble comrade, who assists Jan and Jeanie.

Martin – Out of desperation to clear himself from the situation that will eventually lead to his death.

Entangled in a mesh of vengeance, blood, murder, hatred and love,  Corridon  has to find Mallory to save himself.

With everybody having an intention of  their own, a desperate search starts, for the elusive, cold hearted, traitorous Mallory who is also a ruthless murderer.

Written by James Hadley Chase, this is one seriously thrilling novel that gets better by the word and throws suspense after suspense every passing page.....
Rating: 4 / 5 .
 *************************************************************************
மதராசப்பட்டினம்...


 






 







ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதை facebook ல கிழிச்சப்ப, ’கழுத,இதைப் பத்தி ப்ளாக்ல எழுதக்கூடாது’ன்னு நினைச்சேன்.ஆனா,சும்மா சும்மா கடுப்பு ஏத்துராணுக.ஒரு படத்த காபி அடிக்குறவனே ஓவர் சவுண்ட் கொடுக்க மாட்டான்.இவனுக மானாவாரியா காபி அடிச்சிட்டு,ஓவரா பேசுராணுக....
கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு பேப்பர்ல பார்த்த இந்தப்படத்தோட ஒரு விளம்பரம் தான்,இப்ப ஏறி இருக்கும் கடுப்புக்கு காரணம். அதாவது மாவட்டவாரியா டிக்கெட் கிடைச்சவங்க இத்தனை,டிக்கெட் கிடைக்காம பார்காதவங்க இத்தனை னு ஒரு கணக்கு(??) காட்டி,ஓவர் சீன் போட்டு இருந்தாணுக.அதுல முடிவு பண்ணினேன் இதைக் கொஞ்சம் கிழிச்சாதான் சாந்தி அடையும்னு.
சரி,இப்ப கதைய பார்க்கலாம்.
அதாவது, வருஷம் 1958,அமெரிக்காவை சேர்ந்த கேட்,குடும்பத்தோட கியூபா வர்றா.அங்க ஒரு ஜாவியர்னு ஒரு ஏழை சர்வர் கூட பழகி,லவ் பண்ண ஆரம்பிக்கிறா.ஆனா, அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் அப்ப ஒரு பிரச்சனை எழுது.
அதனால,கியூபாவுல இருக்கிற அமெரிக்க மக்களை எல்லாம் வெளியேத்துராறு காஸ்ட்ரோ.இதனால கேட் கியூபாவை விட்டுப் போகவேண்டியதா இருக்கு.அது பனிப்போர்க் காலம்.எப்ப நிலைமை சரியாகும்னு தெரியாது.அதனால காதலர்கள் இருவரும் எப்ப பார்துப்பாங்க னு கூட தெரியாது.என்ன ஆச்சு?கேட் போனாளா?இல்லையா? இது தான் கதை.

என்னடா,மதராசப்பட்டினம் கதைய சொல்றேன்னு சொல்லிப்புட்டு,வேற எதையோ சொல்லிக்கிட்டு இருக்கானே னு பார்க்குறீங்களா?

அண்ணே,மதராசப்பட்டினம் கதையே இது தான்!

சரி,கதைய Dirty Dancing: Havana Nights (2004) ல இருந்து உருவியாச்சு.ஆனா,இப்படி சாதாரணமா சொல்ல முடியாதே! என்ன செய்யலாம்?பரபரப்பா காட்டனுமே! கழுத,இருக்கவே இருக்கு சுதந்திரப் போராட்டக் காலம்.அப்புடியே அங்கன ஷிப்ட் பண்ணுவோம் கதைய....

அப்புடியே அமெரிக்கப் பொண்ணுங்றதுக்கு பதிலா பிரிட்டிஷ் பொண்ணுனு மாத்துவோம்.அடடே,மொக்கையா ஒரு பிரிட்டிஷ் பொண்ணு,லவ் அப்டின்னா ஓடாதே!

ஆங்,எதுக்கு இருக்கு லகான்? அப்புடியே அமுக்கு...

 

அங்க கோட்டைத் தலைவன் தங்கச்சி,இங்க கவர்னர் மகள்!

 

அங்க லகான் வரி,இங்க கோல்ப்க்கு இடம் கையகப்படுத்துறது.

 

அங்க கிரிக்கெட்,இங்க மல்யுத்தம்.(அந்த சண்டை நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை.)

 

நல்லவேளை,அங்க முக்கோணக் காதல் மாதிரி,இங்கயும் முக்கோணக் காதல் வைக்காம இருந்தாணுக!இதுக்கே தாங்க முடியல.

 

இதெல்லாம் சரி,கதைய சுட்டாச்சு.

 

சீன் கூட கொஞ்சம் காபி அடிசுக்கலாம்.ஆனாலும்,ரெண்டாவது பாகத்துல எதுவோ குறையுதே!

 

ஆங்,எதுக்கு இருக்கு டைடானிக் ? அப்புடியே அதுல இருந்து பூராத்தையும் உருவு...

 

அங்க necklace , இங்க போட்டோ..

 

அங்க கப்பல்குள்ள சேசிங்..

இங்க சென்ட்ரல் சுத்தி சேசிங்..

 

அங்க கடல்ல ஹீரோவும் ஹீரோயினும் ஒரு மரப்பலகைல..

இங்க கூவத்துல...

 

அங்க ஹீரோ கைபிடிய தானே விடுறான்.

இங்க ஹீரோயின் விடுவிக்கிறா...

 

கொஞ்சம் லகான்,நிறைய titanic, நிறைய Dirty Dancing: Havana Nights (2004)
போட்டு குழப்பி அடிச்சா,மதராசபட்டினம் தயார்...

 

கதை Dirty Dancing: Havana Nights (2004),பல சீன்கள் அப்படியே titanic,கொஞ்சம் லகான் கான்செப்ட்.ரெடி ஆயிடுச்சு படம்... எப்புடி?

 

அடடா,அடடா! புல்லரிக்குது என் தங்கமே!தமிழ் சினிமா எங்கயோ போய்டும்.

 

இந்த மாதிரி மொக்கைப் படம் எல்லாம் ஹிட் ஆகி,களவாணி மாதிரி நல்ல படம் எல்லாம் சரியா ஓடாம போவுதே,அது தான் தமிழ் சினிமா ரசிகனின் ரசனை...

 

எதுவோ குறையுதே!  ஆங்,இந்தப் படத்த என்ன இழவுக்குடா பார்த்தனு ஒருத்தன் கிட்ட கேட்டப்ப சொன்னான், "மச்சி,பழைய மெட்ராஸ பார்க்கலாம்டா !" னு.

 

அட எழவெடுத்தவனே ,அதுக்கு நெட்ல தேடிப் பார்த்தாலே போதுமேடா!!

 

என்னய மாதிரி ஏமிய சைட் அடிக்கனு சொல்லி இருந்தாலாவது மன்னிச்சு இருக்கலாம். ;)

 

கீழ,ஒரு reference க்கு, Havana nights கதை.


Dirty Dancing: Havana Nights (2004)
 
In November 1958, the American teenager Katey Miller moves with her parents and her younger sister to Havana. Her father is an executive of Ford expatriated to Cuba, and Katey is an excellent high school senior student that misses her friends. The family is lodged in a fancy hotel, where Katey accidentally meets the local teenage waiter Javier Suarez. Later she sees Javier dancing in a public square and they become friends, but he is fired from the hotel because her acquaintances have seen them together. Katey invites Javier to participate of a Latin Ballroom Contest in the local Palace club to help him to raise some money, and she secretly meets him in the La Rosa Negra nightclub for rehearsals. Later they fall in love for each other in times of revolution.
An American girl (Garai) and her parents arrive in Cuba right before the Revolution breaks out. She meets a local boy (Luna) who instantly notices her dancing abilities and romances her. But as Castro's forces are forcing Americans to leave the country, will she stay or will she go?


A small note:

The Indli  button on the left is for the English articles and the one on the right is for Tamil.